4 விவசாயிகளின் குடும்பத்திற்கு தலா ரூ.45 லட்சம் – ஏடிஜிபி பிரசாந்த் குமார்..!

Published by
murugan

நேற்று உயிரிழந்த 4 விவசாயிகளின் குடும்பங்களுக்கு அரசு தலா ரூ. 45 லட்சம் அரசு வேலை வழங்கப்படும் என ஏடிஜிபி பிரசாந்த் குமார் கூறினார்.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடந்துவருகிறது. இந்த போராட்டத்தை உத்திரபிரதேசம் லக்கிம்பூரை சேர்ந்த விவசாயிகளும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். நேற்று லக்கிம்பூரில் நடந்த நிகழ்ச்சி பங்கேற்க அம்மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா வருவதாக கூறப்பட்டது. இதனால், துணை முதல்வர் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, ஒரு கார் விவசாயிகள் மீது மோதியது. இதில் 2 விவசாயிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையால் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.  இந்நிலையில், விவசாயிகள் உயிரிழப்பிற்கு பலர் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

சற்று நேரத்திற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த, லக்கிம்பூர் கெரியில் நேற்று உயிரிழந்த 4 விவசாயிகளின் குடும்பங்களுக்கு அரசு தலா ரூ. 45 லட்சம் அரசு வேலை வழங்கும். காயமடைந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று ஏடிஜிபி (சட்டம் & ஒழுங்கு) பிரசாந்த் குமார்  தெரிவித்தார். விவசாயிகளின் புகாரின் அடிப்படையில் எப்ஐஆர் பதிவு செய்யப்படும்.

ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி இந்த வழக்கை விசாரிப்பார் என தெரிவித்தார். மேலும்,  சிஆர்பிசி பிரிவு 144 அமலில் இருப்பதால் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மாவட்டத்திற்கு வர அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும், விவசாய சங்கங்களின் உறுப்பினர்கள் இங்கு வர அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த வழக்கில் எந்த குற்றவாளியும் காப்பாற்றப்பட மாட்டார். தற்போது, ​​இறுதி சடங்குகள் நடைபெற்று வருகின்றன என்று ஏடிஜிபி (சட்டம் & ஒழுங்கு) பிரசாந்த் குமார் கூறினார்.

Published by
murugan

Recent Posts

திருப்பரங்குன்றம் விவகாரம் : “இந்து மத உணர்வுகளை திமுக அரசு புறக்கணிக்கிறது” ஆவேசமான வானதி! 

திருப்பரங்குன்றம் விவகாரம் : “இந்து மத உணர்வுகளை திமுக அரசு புறக்கணிக்கிறது” ஆவேசமான வானதி!

கோவை : மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையின் ஒரு பகுதியில் இந்து மத கடவுள் முருகன் கோயில், காசி விஸ்வநாதர்…

11 minutes ago

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை… சவரனுக்கு இன்று எவ்வளவு தெரியுமா?

சென்னை : சென்னையில் நேற்று 1 சவரன் ரூ.680 குறைந்து ரூ.61,640க்கு விற்பனையான நிலையில், இன்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது.…

28 minutes ago

LIVE : நாளை ஈரோடு இடைத்தேர்தல் முதல்… பனிமூட்டத்தால் விமான சேவை பாதிப்பு வரை.!

ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. ஈரோடு கிழக்கு…

1 hour ago

ஜில்..ஜில்…: ‘வட தமிழ்நாட்டில் அடர்ந்த பனிமூட்டம்’ சுயாதீன வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் சொன்ன அப்டேட்.!

சென்னை : சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் பனி மூட்டம் நீடிக்கும் என சுயாதீன வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்…

1 hour ago

6 வாரங்களுக்கு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் சஞ்சு சாம்சன்? காரணம் என்ன?

மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான 5வது மற்றும் இறுதி டி20 போட்டியின் போது, சஞ்சுவுக்கு காயம்…

2 hours ago

சிரியாவில் கார் குண்டுவெடிப்பு… உயிரிழப்பு எண்ணிக்கை 20 ஆக உயர்வு!

மன்பிஜ் : சிரியாவின் மன்பிஜ் நகரில் நேற்று மதியம் வெடிகுண்டு நிரப்பப்பட்டிருந்த கார் வெடித்து சிதறியதில், அதன் அருகே இருந்த…

3 hours ago