100 நாள் வேலைத்திட்டத்துக்கு கூடுதலாக ரூ.40 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.
நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் நாட்டின் பொருளாதாரம் பெரும் சரிவை கண்டுள்ளது. இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க பிரதமர் மோடி ரூ.20 லட்சம் கோடிக்கான பொருளாதார சிறப்பு திட்டத்தை அறிவித்தார்.
இதனை சுயசார்பு பாரதம் என்ற பெயரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடந்து 4 நாட்களாக அறிவித்து வருகிறார். நேற்றைய அறிவிப்பில், கனிமங்கள், ராணுவ பாதுகாப்பு தடவாள உற்பத்தி, விமானம், விண்வெளி, அணுசக்தி உள்ளிட்ட 8 துறைகளுக்கு முக்கிய அறிவிப்புகள் வெளியிட்டார். தற்போது, இன்று இறுதிக் கட்ட முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
அதில், 100 நாள் வேலைத்திட்டத்துக்கு கூடுதலாக ரூ.40 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நிதியாண்டில் 100 நாள் வேலைத்திட்டத்திற்காக ரூ.61,000 கோடி ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது கூடுதலாக ரூ.40,000 ஆயிரம் கோடி ஒதுக்கப்படுகிறது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
சென்னை : தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர் பட்டியல் திருத்துவதற்கு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. நாளை ஞாயிற்றுக்கிழமையும் முகாம் நடைபெறவுள்ளது.…
சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
சென்னை : கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள ஐயப்பனுக்கு உகந்த கார்த்திகை மாதம் இன்று (16.11.2024) முதல்…
உத்தரப்பிரதேசம் : ஜான்சி மாவட்டத்தில் மகாராணி லட்சுமிபாய் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்றிரவு நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில், பச்சிளம்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது.…
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…