மூலிகை தோட்டம் அமைக்க ரூ.4,000 கோடி ஒதுக்கீடு
கங்கை நதி கரையில் 2 பக்கங்களிலும் 800 ஹெக்டேர் நிலப்பரப்பில் மூலிகை தோட்டங்கள் உருவாக்கப்பட்டு, மூலிகை பொருட்கள் மற்றும் மருத்துவ பொருட்கள் உற்பத்தி ஊக்குவிக்கப்படும்.
மருத்துவ மூலிகை பயிர்களின் சாகுபடிக்காக ரூ.4 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு. அடுத்த 2 ஆண்டுகளில் 10 லட்சம் ஹெக்டேரில் மூலிகை பயிர்கள் பயிரிடுவதை ஊக்குவிக்கும் வகையில் இந்த நான்காயிரம் கோடி ரூபாய் நிதி பயனுள்ளதாக அமையும்.இதன் மூலம் 5000 கோடி ரூபாய் வருமானம் ஈட்ட முடியும் என நம்பிக்கை.
தேசிய மருத்துவ தாவர வாரியம் 2.25 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் மருத்துவ தாவரங்களை வளர்ப்பதை ஊக்குவித்துள்ளது.