வெளிநாட்டினரை ஏமாற்றி ரூ.4 கோடி மோசடி! மும்பையில் 6 பேர் கைது.!
மும்பையில் போலி கால் சென்டர் மூலம் வெளிநாட்டினரை ஏமாற்றி ரூ.4 கோடி மோசடி செய்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மும்பையின் கோரேகானில் போலி கால் சென்டர் அமைத்து மொரீஷியஸ் மற்றும் வளைகுடா நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினரை ஏமாற்றி ரூ.4 கோடி மோசடி செய்த 6 பேர் கைது செய்யப்பட்டு பணமும் பிடிபட்டது என்று மும்பை போலிசார் தெரிவித்தனர்.
ஒன் 721 குளோபல் சர்வீஸ் லிமிடெட் எனும் போலி கால் சென்டர் நிறுவனத்தை நடத்தி வரும் அந்த குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்களை அந்நியச் செலாவணி டிரேடிங் நிபுணர்களாகக் காட்டிக் கொண்டு மோசடி செய்துள்ளனர்.
ஆன்லைன் மூலம் மொரீஷியஸ் மற்றும் வளைகுடா நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினரை, 200 டாலர்களை தங்கள் கணக்கில் டெபாசிட் செய்து வர்த்தகத்தைத் தொடங்குமாறு கூறியுள்ளதாக போலிசார் விசாரணையில் தெரிவித்தனர்.
மேலும் 6 பேரைக் கைது செய்துள்ளதாகவும் 6 லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.