Categories: இந்தியா

ரூ.4.5 கோடி பணம், 2.7 கிலோ தங்கம்.. ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் 5 நாட்களாக நடந்த சோதனை நிறைவு!

Published by
பாலா கலியமூர்த்தி

திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் கடந்த 5 நாளாக நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றது. எம்ஜிஆர் காலத்தில் அதிமுகவில் இருந்தவர் தான் தற்போதைய திமுக எம்பி ஜெகத்ரட்சகன். கடந்த 2009ல் அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்த அவர், லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு மத்திய அமைச்சரானார். அந்த சமயத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், நிலக்கரி சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் புகார் எழுந்தது.

இந்த புகாரை தொடர்நது கடந்த 2020ல் சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக ஜெகத்ரட்சகன் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனையை தொடர்ந்து அவரது சொத்துக்கள் முடக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதனைத்தொடர்ந்து, கடந்த சில நாட்களாக திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் தொடர்புடைய 60-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டது.

சென்னை, காஞ்சிபுரம், புதுச்சேரி, திருவள்ளூர், திருப்பூரில் ஜெகத்ரட்சகனின் வீடு மற்றும் அவர் தொடர்புடைய கல்வி நிலையங்கள், மருத்துவமனை, மருத்துவ கல்லூரி, ஹோட்டல் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்து சோதனை நடைபெறுவதாக கூறப்பட்டது.

ஐந்தாவது நாளாக நேற்றும் பல்வேறு இடங்களில் சோதனை தொடர்ந்தது. இந்த நிலையில், திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் 5 நாட்களாக நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றுள்ளது. இந்த சோதனையில் வரி ஏய்ப்பு புகாரில் கணக்கில் வராத பணம் மற்றும் முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. 4.5 கோடி ரூபாய் பணம் 2.7 கிலோ மதிப்பிலான தங்க நகைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், நேற்று ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது மருமகன் நாராயணசாமி இளமாறன், மகள் ஸ்ரீனிசா ஆகியோரிடம் தனித்தனியாக வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். ஜெகத்ரட்சகன் நடத்தி வந்த அறக்கட்டளையின் வரி விலக்கு ரத்து செய்யப்பட்ட நிலையில், கடந்த 6 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்ததாக உள்ள புகாரை எடுத்து சோதனை நடத்தப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

இதனிடையே, கடந்த 2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு அவரது அறக்கட்டளைக்கு வரி விலக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. புதிய பெயர்களில் அறக்கட்டளையை பதிவு செய்து வந்ததால் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த சமயத்தில்,  அறக்கட்டளை பணப்பரிமாற்றம் செய்யப்பட்ட விவகாரத்தில் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக வருமானவரித்துறை தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!

மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…

5 hours ago

லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…

சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…

7 hours ago

“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…

8 hours ago

புஷ்பா 2 வெளியீடு: நெரிசலில் சிக்கிய சிறுவன் மூளைச் சாவு… தாயை தொடர்ந்து மகனும் உயிரிழந்த சோகம்!

ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…

9 hours ago

“அம்பேத்கர்… அம்பேத்கர்…” அமித்ஷாவை வன்மையாக கண்டிக்கிறேன் – கொந்தளித்த விஜய்!

சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…

10 hours ago

இன்றும், நாளையும் 4 மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் – டெல்டா வெதர்மேன்.!

சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…

10 hours ago