வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு விவசாயிகளுக்கு ரூ.330 கோடி நிதியுதவி..! குஜராத் அரசு அறிவிப்பு..!

Default Image

வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு விவசாயிகளுக்கு ரூ.330 கோடி நிதியுதவியை குஜராத் அரசு அறிவித்துள்ளது.

சில காலமாக வெங்காயம், உருளைக்கிழங்கு விளைவிக்கும் விவசாயிகள் கட்டுப்படியான விலை கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர். இறுதியாக விவசாயிகளின் நலனுக்காக குஜராத் அரசு ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது. விவசாயிகள் நலன் குறித்து சட்டசபையில் பேசிய மாநில விவசாய அமைச்சர் ராகவ்ஜி படேல், கடந்த ஆண்டை விட குஜராத்தில் ஏழு லட்சம் மெட்ரிக் டன் சிவப்பு வெங்காயம் மற்றும் இரண்டு லட்சம் மெட்ரிக் டன் உருளைக்கிழங்கு அதிகமாக உற்பத்தி செய்யப்படும் தெரிவித்தார். 

வெங்காய விவசயிகளுக்கு ரூ.90 கோடி :

onion & potato farmers

அதில் சௌராஷ்டிரா பகுதியில் உள்ள சந்தைகளில் 3.50 லட்சம் டன் விளைபொருட்கள் விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது, இதற்காக வேளாண் விளைபொருள் சந்தைக் குழுக்கள் (ஏபிஎம்சி) மூலம் விற்பனைக்கு ஒரு கிலோவுக்கு கூடுதலாக ரூ.2 வழங்குவதன் மூலம் ரூ.70 கோடியை அரசாங்கம் வழங்கும் என்றும் விளைபொருட்களை பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு கொண்டு செல்ல விவசாயிகளுக்கு ரூ.20 கோடி உதவி கிடைக்கும் என்றும் கூறினார்.

உருளைக்கிழங்கு விவசயிகளுக்கு ரூ.240 கோடி :

onion & potato farmers 1

இதையடுத்து அதிக உற்பத்தி காரணமாக விலை வீழ்ச்சியினால் பாதிக்கப்பட்டுள்ள உருளைக்கிழங்கு உற்பத்தியாளர்களுக்கு ரூ.240 கோடி நிதியுதவி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். ரூ.240 கோடியில் இருந்து முதல்கட்ட மதிப்பீட்டில் போக்குவரத்து உதவியாக ரூ.20 கோடி வழங்கப்படும் என்று கூறினார்.

உருளைக்கிழங்கை குளிர்பதன கிடங்குகளில் சேமித்து வைப்பதற்கும் விவசாயிகளுக்கு ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சந்தைகளில் உருளைக்கிழங்கு விற்கும் விவசாயிகளுக்கு ஒரு கிலோவுக்கு 1 ரூபாய் வீதம் அரசு உதவி வழங்கும். இதற்காக ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று மாநில விவசாய அமைச்சர் ராகவ்ஜி படேல் மேலும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்