தங்கப் பத்திரம் (SGB) திட்டத்திலிருந்து ரூ.31,290 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது -நிர்மலா சீதாராமன்..!

Default Image

தங்கப் பத்திரம் (SGB) திட்டத்திலிருந்து ரூ.31,290 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து தங்கப் பத்திரம் (SGB) திட்டத்திலிருந்து ரூ.31,290 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். மாற்று நிதிச் சொத்தை வளர்ப்பதற்கான முக்கிய நோக்கத்துடன் மற்றும் தங்கத்தை வாங்குவதற்கு/வைத்திருப்பதற்கு மாற்றாக SGB திட்டம் நவம்பர் 5, 2015 அன்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது என்று சீதாராமன் மக்களவையில் கூறினார்.

எஸ்ஜிபி திட்டத்தில் 2015-16 முதல் ரூ. 31,290 கோடி வசூல் செய்துள்ளது என்று அவர் கூறினார். இந்த திட்டத்தின் அம்சங்கள் குறித்து பேசிய நிதியமைச்சர், இந்த பத்திரங்கள் இந்திய ரூபாய் செலுத்தி வழங்கப்படுவதாகவும், மத்திய அரசின் சார்பாக ரிசர்வ் வங்கி மூலம் பத்திரங்கள் வழங்கப்படுகின்றன.

வருடத்திற்கு 6 முறை தங்க பத்திரம் திட்டத்தினை ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது. ஒரு தனி நபர் இ கிராமில் இருந்து நான்கு கிலோ வரை முதலீடு செய்யலாம். இந்த பத்திரங்களுக்கு 6 மாதங்களுக்கு ஒரு முறை 2.5 சதவிகிதம் வட்டி வழங்கப்படும்.  தங்கப் பத்திரத் திட்டத்தின் ஐந்தாம் கட்டம் இன்று முதல்  முதல் ஆகஸ்ட் 13 வரை விற்கப்படுகிறது. பத்திரத்தின் வெளியீட்டு விலை ஒரு கிராமுக்கு ரூ.4,790 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்