விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்க நபாட் வங்கி மூலம் ரூ.30,000 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி அறிவித்த, ரூ.20 லட்சம் கோடி நாட்டின் பொருளாதார மேம்பாட்டு சிறப்பு திட்டத்திற்கான முதல் கட்ட அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று வெளியிட்டார். இந்த முதல் கட்ட அறிவிப்பில், சிறு, குறு நடுத்தர தொழில்களை மேம்படுத்துவதற்கான ரூ.5.94 லட்சம் கோடிக்கான திட்டங்களை அறிவித்திருந்தார். இதையடுத்து இன்று 2 ம் கட்ட அறிவிப்புகளை செய்தியாளர்களை சந்தித்து வெளியிட்டார். அதில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள், சிறு விவசாயிகள் மற்றும் நடைபாதை வியாபாரிகள் ஆகியோருக்கான 9 முக்கிய திட்டங்கள் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், 2 ஆம் கட்ட அறிவிப்பில் முக்கிய அம்சமாக கருதப்படும் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்க நபார்ட் வங்கி மூலம் ரூ.30,000 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார். மேலும், கடனுதவி பெற்ற விவசாயிகள் சிரமப்படக்கூடாது என்பதற்காக கடனை திருப்பிச் செலுத்தும் காலம் 3 மாதமாக நீடிக்கப்படுகிறது என அறிவித்துள்ளார். இதையயடுத்து நபார்ட் வங்கி மூலம் கூட்டுறவு மற்றும் கிராமப்புற வங்கிகளுக்கு ரூ.29,500 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது என்றும் 100 நாள் வேலைத் திட்டத்தில் ஒரு நாளுக்கான ஊதியம் ரூ.182 லிருந்து ரூ.202 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என கூறியுள்ளார். பின்னர் கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தில் ரூ.2 லட்சம் கோடி கடன் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…