கேரளாவில் உள்ள 1,59,481 மீனவர் குடும்பங்களுக்கு ரூ.3000 வழங்கப்படும் என முதல்வர் அறிவிப்பு.
அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பெய்த கனமழையால் தினக்கூலியை இழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதியாக ரூ.3,000 வழங்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். மாநிலத்தில் உள்ள 1.60 லட்சம் மீனவர்களுக்கு பேரிடர் நிவாரண நிதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து முதல்வர் பினராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில் “அக்டோபர் மற்றும் நவம்பரில் கனமழையால் அதிக எண்ணிக்கையிலான வேலை நாட்கள் இழந்ததால், கேரளாவில் உள்ள 1,59,481 மீனவர் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 3000 ரூபாய் வழங்கப்படும். இந்த நிவாரண நடவடிக்கைக்காக முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.47.84 கோடி ஒதுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.
கடந்த அக்டோபர் மாதம், மழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சமும், தொடர் மழையால் வீடுகள் இடிந்து விழுந்தவர்களுக்கு ரூ.10 லட்சமும் வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்தது. கேரளாவில் கடந்த 4 ஆண்டுகளாக ஒவ்வொரு பருவமழையிலும் கனமழை பெய்து வருகிறது.
சென்னை : தவெக தலைவர் விஜய், கடந்த மார்ச் மாதம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு…
சென்னை : அதிமுக - பாஜக கூட்டணியை மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா அறிவித்தது தான் அறிவித்தார்.…
திருவள்ளூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில்…
ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின்…
சென்னை : வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், இறுகப்பற்று ஆகிய திரைப்படங்க்ளில் நடித்து தமிழ் சினிமாவில் நல்ல…
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…