பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் தகுதியற்ற 42.16 லட்சம் விவசாயிகளால் பெறப்பட்ட ரூ.2,992 கோடியை அரசு மீட்டெடுக்கும் என்று மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.
பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2000 வீதம் மூன்று தவணையாக ஆண்டுக்கு மொத்தம் ரூ. 6000 நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் தகுதியற்ற விவசாயிகளும் பணம் பெறுவதாக பல குற்றசாட்டு எழுந்தது.
இந்நிலையில், பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் திட்டத்தில் தகுதி இல்லாமல் பணம் பெற்று வரும் 42 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் இன்று மக்களவையில் தெரிவித்தார்.
நாடு முழுவதும் இதுவரை தகுதியற்ற 42,16,643 விவசாயிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வேளாண் அமைச்சர் தெரிவித்தார். பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் மொத்தம் ரூ.29,92,75,16,000 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளன. அவை அரசாங்கத்தால் மீட்கப்படும் என தெரிவித்தார். பிரதமர் கிசானின் கீழ் அதிக தகுதியற்ற விவசாயிகள் அசாமில் உள்ளனர் என்று அமைச்சர் கூறினார்.
அசாமில் 8,35,268 விவசாயிகள் உள்ளனர். இதைத்தொடர்ந்து தமிழ்நாடு (7,22,271), பஞ்சாப் (5,62,256), மகாராஷ்டிரா (4,45,497), குஜராத் (2,36,543), கர்நாடகா (2,08,705), மத்தியப் பிரதேசம் (2,51,391), ராஜஸ்தான் ( 2,13,937), உத்தரபிரதேசம் (2,65,321) தகுதியற்ற விவசாயிகள் உள்ளனர் என தெரிவித்தார்.
சிக்கிமில் தகுதியற்ற விவசாயிகள் மிகக் குறைவான எண்ணிக்கையில் உள்ளனர் என்றும் அமைச்சர் தெரிவித்தார். இதன் பின்னர், லட்சத்தீவில் 5, லடாக்கில் 23, மேற்கு வங்கத்தில் 19, சண்டிகரில் 30 மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் 136 தகுதியற்ற விவசாயிகள் உள்ளனர்.
மாநில வாரியாக மீட்கும் தொகைக்கான பட்டியலில் அசாம் ரூ .554 கோடியும், பஞ்சாப் ரூ.437 கோடியும், மகாராஷ்டிரா ரூ.358 கோடியும் ,தமிழ்நாட்டில் ரூ.340 கோடியும், உ.பி ரூ .258 கோடியும், குஜராத் ரூ. 220 கோடியும் வசூலிக்க வேண்டும் என தெரிவித்தார்.
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …