சிலிண்டருக்கு ரூ.300 மானியம்.. பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000 வைப்பு நிதி – புதுச்சேரி முதல்வர் அதிரடி அறிவிப்பு

Default Image

புதுச்சேரியில் சட்டப்பேரவையில் 2023-24-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் உரையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் முதல்வர்.

புதுச்சேரி முழு பட்ஜெட்:

புதுச்சேரியில் சட்டப்பேரவையில் 2023-24-ஆம் ஆண்டிற்கான ரூ.11,600 கோடிக்கான முழு பட்ஜெட்டை அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார். கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரி சட்டப்பேரவையில் மாதத்தில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளை முதலமைச்சர் ரங்கசாமி ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறார்.

சிலிண்டருக்கு மானியம்:

அந்தவகையில், புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.300 மானியம் வழங்கப்படும் என அதிரடியாக அறிவித்துள்ளார். மேலும் புதுச்சேரி பட்ஜெட் உரையில் முதலமைச்சர் அறிவிப்புகள் பின்வருபவை; 50 புதிய மின்சார பேருந்துகள் வாங்க ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. தொற்று நோயை கண்டறிய புதுச்சேரியில் ஆய்வகம் அமைக்கப்படும்.

வைப்பு தொகை:

புதுச்சேரியில் பெண் குழந்தைகளுக்கு தேசிய வங்கியில் ரூ.50 ஆயிரம் வைப்பு தொகையாக செலுத்தப்படும் என மற்றொரு முக்கிய அறிவிப்பை அறிவித்தார். அதாவது, பெண் குழந்தை பிறந்தால் வங்கியில் 18 ஆண்டுகளுக்கு ரூ.50 ஆயிரம் நிரந்தர வைப்பு நிதியாக செலுத்தப்படும் என முதலமைச்சர் விளக்கமளித்தார்.

சிபிஎஸ்இ பாடத்திட்டம்:

எம்எல்ஏ மேம்பாட்டு நிதி ரூ.1 கோடியில் இருந்து ரூ.2 கோடியாக உயர்த்தப்படும். பிளாஸ்டி பைகளுக்கு மாற்றாக துணிப்பைகள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புகள் வரை சிபிஎஸ்இ பாடத்திட்டமாக மாற்றப்படும் என்றும் 11, 12ம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி விரைவில் வழங்கப்படும் என்றும் மீனவர் உதவித்தொகை ரூ.3,000 லிருந்து ரூ.3,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது எனவும் அறிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்