புதுச்சேரியில் கேஸ் சிலிண்டருக்கு ரூ.300 மானியம் – அரசாணை வெளியீடு!

gas cylinder

புதுச்சேரியில் கேஸ் சிலிண்டருக்கு ரூ.300 மானியம் வழங்க துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ஒப்புதல். 

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.300 சிலிண்டர் மானியம் வழங்க புதுச்சேரி அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதாவது, புதுச்சேரியில் ஒரு வீட்டு உபயோக சிலிண்டருக்கு மாதம் ரூ.300 மானியம் வழங்க அம்மாநில துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளித்ததை அடுத்து அரசாணை வெளியாகியுள்ளது.

அதன்படி, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள சிவப்பு நிற அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு 12 சிலிண்டர்களுக்கு தலா ரூ.300 மானியம் வழங்கவும், வறுமை கோட்டிற்கு மேல் உள்ள மஞ்சள் அட்டை தாரர்களுக்கு சிலிண்டருக்கு ரூ.150 மானியம் வழங்கவும் அம்மாநில அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணை அரசிதழில் வெளியிடப்பட்டவுடன் உடனடியாக அமலுக்கு வரும் என்றுள்ளனர்.

மேலும், இந்த சிலிண்டர் மானியத்தொகை அவரவர் வங்கிக் கணக்கில் நேரடியாக  செலுத்தப்படும் எனவும் புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் மாதம் ஒரு வீட்டு உபயோக சிலிண்டருக்கு ரூ.300 மானியம் வழங்கப்படும் என கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதல்வர் ரங்கசாமி அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்