திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ரூ.2,750 மாதாந்திர பென்ஷன்; ஹரியானா அரசு அசத்தல் அறிவிப்பு.!

Haryana cm manoharlal

45-60 வயது வரை உள்ள திருமணமாகாதவர்ளுக்கு ஹரியானா மாநிலத்தில் மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படும் என அறிவிப்பு.

ஹரியானா மாநிலத்தில் 45 முதல் 60 வயது வரையுள்ள திருமணமாகாத ஆண்கள், பெண்களுக்கு அதிலும் ஆண்டு வருமானம் ரூ.1.8 லட்சத்துக்கும் குறைவாக உள்ளவர்களுக்கு மாதாந்திர பென்ஷனாக ரூ.2,750 வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் மனோகர்லால் கட்டார் அறிவித்துள்ளார். முதல்வர் அலுவலகம் தயாரித்த அறிக்கையின்படி, 1.25 லட்சம் பேர்  இந்த திட்டத்தின் மூலம் பலனடைவார்கள் என்று கூறப்படுகிறது.

மேலும் இந்த அறிவிப்பில் 40 முதல் 60 வயதுக்குட்பட்ட ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கும் குறைவாக உள்ள கணவனை இழந்த பெண்களுக்கும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ. 2,750 வழங்கப்படுகிறது. முதல்வர் கலந்துகொண்ட பொது நிகழ்ச்சியில் 60 வயது திருமணமாகாத முதியவர், வைத்த கோரிக்கையின் பேரில் தற்போது இந்த ஓய்வூதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்