மனைவிக்கு மாதவிடாய் நாட்களில் அவருக்கு துணையாக இருக்க கணவனுக்கும் விடுமுறை அளித்துள்ளது பெங்களூரு தனியார் நிறுவனம்.
Horses Stable என்ற நிறுவனத்தில் ஆண்கள் பெண்கள் என இரு பாலர்களும் பணிபுரிந்து வருகிறார்கள்.மேலும் இங்கு சிலர் தம்பதிகளாகவும் பணிபுரிகிறார்கள். இந்நிலையில் அங்கு பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் சிறப்பு சலுகையாக ரூ.250 வழங்கி 2 நாள் விடுமுறையும் அளிக்கப்படுகிறது.இதில் என்ன சுவாரசியம் என்றால் அங்கு அவரது கணவரும் அதே நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தால் மனைவிக்கு துணையாக, உதவியாக வீட்டில் இருந்து பார்த்துக்கொள்ள அவருக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கிறது.
Horses Stable நிறுவனர் சலோனி அகர்வால் சொல்லும்பொழுது மாதவிடாய் நாட்களில் பல பெண்கள் அடிவயிறு வலியால் மிகவும் கஷ்டப்படுவார்கள். அந்த நேரத்தில் மன அழுத்தம் அதிகமாக இருப்பதால் அவர்களுக்கு விடுமுறை கொடுத்து அவரது கணவரும் பக்கத்தில் இருப்பது மிகவும் நம்பிக்கையாக இருப்பதாய் பெண்கள் உணர்வார்கள் என்றார்.
எங்கள் ஊழியர்களின் தேவைகளை கவனிப்பதைத் தவிர, எங்களால் முடிந்தவரை அவர்களுக்கு ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை நோக்கி செயல்பட நாங்கள் இந்த முயற்சிகளை எடுக்கிறோம். ஆண், பெண் பாகுபாடின்றி வீட்டில் இருவரும் சமமாக இருந்து குடும்பத்தை நடத்த வேண்டும் என்ற எண்ணம் உருவாகுவதற்காக இதுபோன்ற ஒரு முயற்சியை மேற்கொண்டுள்ளதாக நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலு அவர் கூறுகையில் ‘Nay to Yay’ என்பது சமூகத்தின் முன்னேற்றத்தை நோக்கியும், தொழிலாளர் தொகுப்பில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதும் ஆகும்.
சென்னை : சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து இரண்டாம் நாளாக கடும் சரிவைக் கண்டுள்ளது. கடந்த வாரம்…
சென்னை : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் ஊழல் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், அதானியை தமிழக…
மும்பை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் கடந்த 2 நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், பல வரலாறை புரட்டி…
சென்னை : கடந்த 2020 பிப்ரவரி மாதம் தமிழக சட்டப்பேரவையில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஓரு முக்கிய தீர்மானத்தை…
மும்பை : எஸ்ஸார் குழுமத்தின் இணை நிறுவனரான ஷஷி ரூயா, நேற்று திங்கள்கிழமை (நவ.-25) தனது 80 வயதில் காலமானார்.…
டெல்லி : 2025 பொங்கல் திருநாள் அன்று நடத்தப்படவிருந்த பட்டயக் கணக்காளர் (CA) தேர்வுகள் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி,…