J&K Attack: உயிரிழந்த வீரரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் – ஒடிசா முதல்வர் அறிவிப்பு.!
பூஞ்ச் பகுதியில் உயிரிழந்த ராணுவ வீரரின் குடும்பத்திற்கு ஒடிசா முதல்வர் ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்குவதாக அறிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவ வாகனம் சென்று கொண்டிருந்தபோது தீப்பிடித்து விபத்துக்குள்ளாகியது, இந்த விபத்தில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர், மற்றும் படுகாயமடைந்த ஒருவர் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தற்போது, இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் ஒருவரான ஓடிசாவை சேர்ந்த லான்ஸ் நாயக் தேபாஷிஷ் பஸ்வாலின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்.
ବରିଷ୍ଠ ରାଜନେତା ତଥା ପୂର୍ବତନ ସାଂସଦ ତ୍ରିଲୋଚନ କାନୁନଗୋଙ୍କ ପରଲୋକ ବିଷୟରେ ଜାଣି ମୁଁ ଦୁଃଖିତ। ଜନସେବା କ୍ଷେତ୍ରରେ ତାଙ୍କର କାର୍ଯ୍ୟ ସର୍ବଦା ସ୍ମରଣୀୟ ରହିବ। ତାଙ୍କ ଅମର ଆତ୍ମାର ସଦଗତି କାମନା କରିବା ସହ ଶୋକସନ୍ତପ୍ତ ପରିବାର ସଦସ୍ୟଙ୍କ ପ୍ରତି ମୋର ସମବେଦନା ଜଣାଉଛି।
— Naveen Patnaik (@Naveen_Odisha) April 21, 2023
பிஸ்வாலின் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்ட பட்நாயக், அவரது துணிச்சலையும் தைரியத்தையும் பாராட்டினார். பூரி மாவட்டத்தில் உள்ள சகிகோபால் அருகே உள்ள அழகம் பகுதியைச் சேர்ந்த தேபாஷிஷ் பிஸ்வாலுக்கு மனைவி மற்றும் 7 மாத குழந்தை ஒன்று உள்ளது என்பது வருந்தத்தக்க விஷயமாக பார்க்கப்படுகிறது.