குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரு.2000 வழங்கப்படும் – பிரியங்கா காந்தி
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குடும்ப ரூ.2000 வழங்கப்படும் என்று பிரியங்கா காந்தி அறிவிப்பு.
பெங்களூருவில் காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரியங்கா காந்தி அவர்கள் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குடும்ப ரூ.2000 வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். கர்நாடக சட்டப்பேரவைக்கு இன்னும் ஒருசில மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரியங்கா காந்தி இவ்வாறு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.