கொரோனாவால் ஒரு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ .2,000 உதவி கிடைக்கும் என்று குஜராத் அரசு அறிவித்தது.
கொரோனா வைரஸ் நோயால் ஒரு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு முகியா மந்திரி பால் சேவா யோஜனாவின் தற்போதைய திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ. 2,000 உதவி தொகை என குஜராத் அரசு இன்று அறிவித்துள்ளது. முன்னதாக, இந்த நோயால் பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகள் மட்டுமே இந்த திட்டத்தின் கீழ் உதவி தொகை வழங்கப்பட்டது.
மேலும் அவர்கள் 21 வயதாகும் வரை மாதந்தோறும் ரூ .4,000 உதவிதொகையும், 21 வயதிற்கு மேல் அவர்கள் உயர் படிப்புக்கு செல்ல விரும்பினால், அவர்கள் 24 வயதாகும் வரை மாதத்திற்கு ரூ.6,000 உதவி தொகை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு பெற்றோர்களையும் கொரோனா தொற்றுநோயால் இழந்த 776 குழந்தைகள், இந்த மாத தொடக்கத்தில் பால் சேவ யோஜனாவின் கீழ் தலா ரூ .4,000 முதல் மாத தவணை பெற்றனர்.
கொரோனா வைரஸ் நோயால் குஜராத்தில் இதுவரை 825,000 மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். 10,076 உயிரிழந்துள்ளனர். 814,356 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சுகாதாரத் துறையின் படி, கொரோனா காரணமாக கிட்டத்தட்ட 10 நாட்களாக குஜராத் மாநிலத்தில் எந்த மரணமும் ஏற்படவில்லை.
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. பாகிஸ்தான் நடத்தும் இந்த…
காசா : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஹமாஸ் அமைப்புக்கு எச்சரிக்கை விடுத்து பேசியியிருந்த நிலையில், மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் என…
சென்னை : அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் நடத்திய விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி சென்னை…
பாரிஸ் : பிரதமர் நரேந்திர மோடி 3 நாட்கள் பயணமாக பிரான்ஸ் சென்றுள்ளார். அங்கு பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மேக்ரான்…
குவாத்தமாலா : மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான குவாத்தமாலாவில் பிப்ரவரி 10 காலை உள்ளூர் பேருந்து சாலை பக்கவாட்டில் உள்ள…
மும்பை : வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. பாகிஸ்தான் நடத்தும்…