ஒரு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ .2,000 உதவி தொகை – குஜராத் அரசு அறிவிப்பு ..!

Default Image

கொரோனாவால் ஒரு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ .2,000 உதவி கிடைக்கும் என்று குஜராத் அரசு அறிவித்தது.

கொரோனா வைரஸ் நோயால் ஒரு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு முகியா மந்திரி பால் சேவா யோஜனாவின் தற்போதைய திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ. 2,000 உதவி தொகை என குஜராத் அரசு இன்று அறிவித்துள்ளது. முன்னதாக, இந்த நோயால் பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகள் மட்டுமே இந்த திட்டத்தின் கீழ் உதவி தொகை வழங்கப்பட்டது.

மேலும் அவர்கள் 21 வயதாகும் வரை மாதந்தோறும் ரூ .4,000 உதவிதொகையும், 21 வயதிற்கு மேல் அவர்கள் உயர் படிப்புக்கு செல்ல விரும்பினால், அவர்கள் 24 வயதாகும் வரை மாதத்திற்கு ரூ.6,000 உதவி தொகை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு பெற்றோர்களையும் கொரோனா தொற்றுநோயால் இழந்த 776 குழந்தைகள், இந்த மாத தொடக்கத்தில் பால் சேவ யோஜனாவின் கீழ் தலா ரூ .4,000 முதல் மாத தவணை பெற்றனர்.

கொரோனா வைரஸ் நோயால் குஜராத்தில் இதுவரை 825,000 மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். 10,076 உயிரிழந்துள்ளனர். 814,356 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சுகாதாரத் துறையின் படி, கொரோனா காரணமாக கிட்டத்தட்ட 10 நாட்களாக  குஜராத் மாநிலத்தில் எந்த மரணமும் ஏற்படவில்லை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்