ரூ.20 லட்சம் கோடி திட்டம்: மாலை 4 மணிக்கு மத்திய நிதியமைச்சர் உரை.!
நாட்டின் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கவுள்ளார்
பிரதமர் மோடி நேற்று நாட்டு மக்களிடையே 5 வது முறையாக உரையாற்றினார். அப்போது, நான்காவது கட்ட ஊரடங்கை அறிவித்தார். இந்த ஊரடங்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்றும் இதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்திருந்தார். இதுமட்டுமில்லாமல் ரூ.20 லட்சம் கோடிக்கு சிறப்பு திட்டத்தை அறிவித்திருந்தார். இந்த திட்டம் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடுவார் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், பிரதமர் மோடி அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய்க்கான பொருளாதார மேம்பட்டு சிறப்பு திட்ட அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடுகிறார். நாட்டின் பொருளாதார மேம்பாட்டு சிறப்பு திட்டங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மாலை 4 மணிக்கு வெளியிடவுள்ளார். எனவே, இந்த திட்டத்தில் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மற்றும் விவசாயம் நலன் காக்கும் திட்டங்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.