நடிகர் சோனு சூட் ரூ.20 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறை அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.
ஆம் ஆதமி கட்சி ஆளும் டெல்லி மாநில அரசுடன் இணைந்து செயல்பட போவதாக அறிவித்த நடிகர் சோனு சூட் ரூ.20 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. சமூக சேவைகள் மூலம் புகழ்பெற்ற நடிகர் சோனு சூட் சமீபத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து பேசினார்.
அப்போது, ஆம் ஆதமி கட்சி ஆளும் டெல்லி மாநில அரசின் திட்டம் ஒன்றிற்கு விளம்பர தூதரக நடிகர் சோனு சூட் நியமிக்கப்படுவதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்திருந்தார். இந்த சூழலில் சோனு சூட்க்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
கடந்த ஆண்டு கொரோனா அலையின் போது நிறுவப்பட்ட சோனு சூட்டின் தொண்டு நிறுவனம் ரூ.18 கோடி வரை நன்கொடை பெற்றிருப்பதும், இதில் ரூ.17 கோடி பயன்படுத்தப்படவில்லை என்பது தெரிய வந்துருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நடிகர் சோனு சூட் ரூ.20 கோடி வரி ஏய்ப்பு செய்திருப்பதாக தெரிவித்துள்ளது. நடிகர் சோனு சூட் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வந்த புகாரின் அடிப்படையில், மும்பையில் உள்ள அவருக்கு சொந்தமான ஆறு இடங்களில் கடந்த 3 நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடைய, ஆம் ஆத்மி அரசுடன் இணைந்துள்ள நடிகர் சோனு சூட்டை மிரட்டவே வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது என்று சிவசேனா உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றசாட்டியுள்ளனர்.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…