உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் – ஆந்திர முதல்வர் அறிவிப்பு

Default Image

கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி அறிவித்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி.

நெல்லூர் மாவட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000ம் வழங்கப்படும் என ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் நெல்லூரில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு நடத்திய சாலை கண்காட்சியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 8 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, அவர்களது குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்திருந்தார். இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நிதியுதவி அறிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்