ரூ.2 லட்சம் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்த -முதலமைச்சர்.!
- சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான நேற்று ரூ.2 லட்சம் வரை விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என உத்தவ் தாக்கரே அறிவித்தார்.
- ஆனால் எதிர்க்கட்சிகள் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பயிர்க்கடனை முழுவதும் தள்ளுபடி செய்யக்கோரி எதிர்க்கட்சிகள் சட்டப்பேரவையில் வெளி நடப்பு செய்தனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணியில் ஆட்சியை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்ட சிக்கலால் இரு கட்சிக்கும் இடையில் கூட்டணி முறிந்தது.
அதன் பின்னர் மகாராஷ்டிர மாநிலத்தில் ஆட்சியமைப்பதில் பல குழப்பங்கள் ஏற்பட்டது. இதையடுத்து நீண்ட குழப்பங்களுக்கு பிறகு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பேற்றார்.
சிவசேனாவின் தேர்தல் அறிக்கையில் விவசாயி பயிர்க்கடன் தள்ளுபடி போன்ற அம்சங்கள் இருந்தனர்.மேலும் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தனர்.
இந்நிலையில் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான நேற்று ரூ.2 லட்சம் வரை விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என உத்தவ் தாக்கரே அறிவித்தார். வங்கிகளில் 2019-ம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதிக்குள் ரூ.2 லட்சம் வரை பயிர்க்கடன் பெற்ற அனைத்து விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும். தள்ளுபடி செய்யப்பட்ட கடன் தொகை வங்கிகளில் நேரடியாக செலுத்தப்படும் என கூறினார்.
ஆனால் எதிர்க்கட்சிகள் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பயிர்க்கடனை முழுவதும் தள்ளுபடி செய்யக்கோரி எதிர்க்கட்சிகள் சட்டப்பேரவையில் வெளி நடப்பு செய்தனர்.