ரயில்வே திட்டங்களுக்கு ரூ.2.4 லட்சம் கோடி, மீன்வளத்துறைக்கு ரூ.6000 கோடி ஒதுக்கீடு!
மீன்வளத்துறை மேம்படுத்த ரூ.6,000 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும் என நிதியமைச்சர் அறிவிப்பு.
2023-24ம் நிதியாண்டுக்கான முழுமையன மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்ற மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். விவசாயிகள், பெண்கள் உள்பட அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக 7 முக்கிய அம்சங்களுடன் மத்திய பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த்த வளர்ச்சி, கடைசி நிலை வரை வளர்ச்சி, கட்டமைப்பு மேம்பாடு, தேசத்தின் வளங்களை பயன்படுத்தலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. பசுமை வளர்ச்சி, இளைஞர்களின் ஆற்றல், நிதித்துறை வளர்ச்சி உள்ளிட்டவற்றுக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது எனவும் பட்ஜெட் உரையில் கூறினார்.
இதனைத்தொடர்ந்து பேசிய நிதியமைச்சர், மீன்வளத்துறையை மேம்படுத்த ரூ.6,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவித்துள்ளார். மீனவர்கள், மீன் விற்பனையாளர்கள், மீன் சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ளோர் வறட்சிக்கு ரூ.6,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக தெரிவித்தார்.
இதுபோன்று, பழங்குடியினர் மேம்பாட்டுக்கு ரூ.15,000 கோடி, ரயில்வே திட்டங்களுக்கு ரூ.2.4 லட்சம் கோடி(9 மடங்கு அதிகம்), மேலும், அடிப்படை கட்டமைப்பு ரூ.10 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவித்துள்ளார்.