ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் ஆய்வறிக்கையின் விளைவால் கவுதம் அதானியின் சொத்து மதிப்பும் கடும் வீழ்ச்சி.
அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் விலை தொடர்ந்து குறைந்து வருவதால் கவுதம் அதானியின் சொத்து மதிப்பும் வீழ்ச்சியை தொடர்ந்து, உலக பணக்காரர்கள் பட்டியலில் கவுதம் அதானி 39வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை:
அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம், கடந்த மாதம் 25-ந் தேதி அதானி குழுமம் தொடர்பான ஆய்வறிக்கையை வெளியிட்டது. அதில், அதானி குழுமத்தைச் சேர்ந்த நிறுவனங்கள், தங்களது நிதிநிலை அறிக்கையை உண்மைக்கு புறம்பாக வலுவாகக் காட்டி பங்குச்சந்தையில் முறைகேட்டில் ஈடுபடுவதாக பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்திருந்தது.
பங்குசந்தையில் கடுமையான சரிவு:
இதனைத்தொடர்ந்து, அதானி குழுமத்துக்கு சொந்தமான நிறுவனங்களின் பங்குகளின் விலை பங்குசந்தையில் கடுமையான சரிவை சந்தித்து வருகின்றன. ஹிண்டன்பர்க் நிறுவனம் அறிக்கை வெளியாவதற்கு முன்னர் 120 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 3-ம் இடத்தில் தொழிலதிபர் கவுதம் அதானி இருந்து வந்தார். ஆனால், குழுமத்தின் சொத்து மதிப்பில் ஏற்பட்ட தொடர் வீழ்ச்சி காரணமாக உலக பணக்காரர்கள் பட்டியலில் 3-ம் இடத்தில் இருந்த அதானி தொடர்ந்து பின் தள்ளப்பட்டு வருகிறார்.
39-ஆவது இடத்தில் அதானி:
இந்நிலையில், உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 39-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டார் தொழிலதிபர் அதானி. அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் விலை தொடர்ந்து குறைந்து வருவதால் கவுதம் அதானியின் சொத்து மதிப்பும் வீழ்ச்சியடைந்துள்ளது. அதானியின் சொத்து மதிப்பு இன்று ஒரே நாளில் ரூ.19,850 கோடி சரிந்துள்ளதாக ஃபோர்ஸ் இதழ் அறிவித்துள்ளது. ரூ.19,850 கோடி குறைந்ததால் அதானியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.2,72,115 கோடியாக சரிந்து 39வது இடத்துக்கு சென்றுள்ளார்.
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஏற்கனவே, மத்திய அரசு நிதி சரியாக வழங்கவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்த நிலையில்,…
சென்னை : நாளை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.…
சென்னை : தனுஷ் இயக்கி நடித்து வரும் இட்லிகடை திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என கடந்த…
ஜப்பான் : தெற்கு ஜப்பானில் உள்ள கைஷூ பகுதியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் மக்களை பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. 6.8 என்ற ரிக்டர்…
நியூ யார்க : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வரும் ஜனவரி 20ஆம் தேதி பதவி ஏற்க போகிறார். அந்த…
சென்னை : பொங்கல் விடுமுறையை முன்னிட்டு பயணிகள் பலரும் மெட்ரோ ரயில்களை புக்கிங் செய்து வருகிறார்கள். இந்த சூழலில், பொங்கல்…