ஒரே நாளில் ரூ.193 கோடி டோல் வசூல்; ஃபாஸ்டேக் மூலம் வரலாற்று சாதனை.!
கடந்த ஏப்ரல் 29இல் ஒரேநாளில் ஃபாஸ்டேக் மூலம் ரூ.193 கோடி சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வரலாற்று சாதனையை எட்டியது.
சுங்கக் கட்டணம் வசூலிப்பதற்காக ஃபாஸ்டேக் முறை அமலாக்கம் செய்யப்பட்டதிலிருந்து, சீரான வளர்ச்சிப் பாதையில் இந்தியா மகத்தான சாதனை புரிந்து வருகிறது. கடந்த பிப்ரவரி 2021 இல் இந்திய அரசாங்கத்தால் ஃபாஸ்டேக் முறை கட்டாயம் என அறிவிக்கப்பட்டது முதல் ஃபாஸ்டேக் திட்டத்தின் கீழ் சுங்கச்சாவடிகள் 339 உட்பட 770ல் இருந்து 1,228 ஆக அதிகரித்துள்ளது.
அனைத்து சாலை பயனர்களுக்கும் தொந்தரவில்லாத டோல் அனுபவம், மற்றும் நேரத்தை மிச்சப்படுத்தும் விதமாக ஃபாஸ்டேக் முறை அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரேநாளில் கடந்த ஏப்ரல் 29 அன்று ரூ. 193.15 கோடி, சுங்கக்கட்டண வசூல் செய்யப்பட்டு அதாவது 1.16 கோடி பரிவர்த்தனைகள் மூலம் வசூலிக்கப்பட்டு வரலாற்று சாதனையை எட்டியுள்ளது.
On 29th April 2023, the daily toll collection through #FASTag system achieved a historic milestone, reaching an all-time high collection of Rs. 193.15 crore, with 1.16 crore transactions recorded in a single day.
Read the press release to know more: https://t.co/Cy0O5ar90B#NHAI pic.twitter.com/lLyJnahWG6— NHAI (@NHAI_Official) May 2, 2023