இந்தியா முழுவதும் பறக்கும் படையால் ரூ.1908.76 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல்
இந்தியாவில் இதுவரை தேர்தல் பறக்கும் படையால் ரூ.1908.76 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 11-ஆம் தேதி, இரண்டாம் கட்டமாக தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18 -ஆம் தேதி நடைபெற உள்ளது.
தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.இதற்கான தேர்தல் முடிவுகள் மே 23-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
தற்போது தமிழகத்தை பொருத்தவரை ஏப்ரல் 18-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,பிரதான கட்சிகள் அனைத்தும் வேட்பாளர்களை அறிவித்து வேட்புமனுக்களையும் தாக்கல் செய்தது.அதன் மீதான பரிசீலனையும் நடைபெற்றது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே தேர்தல் ஆணையம் அதன் பணிகளை முழு வீச்சில் செய்து வருகின்றது.குறிப்பாக பறக்கும் படை ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லும் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றது.
இந்நிலையில் தேர்தல் ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில் இந்தியா முழுவதும் ரூ.1908.76 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் ரூ.412.02 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.