கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி பிரதமர் கிசான் உதவித் திட்டம் பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. 4 மாதங்களுக்கு ஒருமுறை மூன்று தவணைகளாக ரூ.2,000 என ரூ.6,000 வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
பிரதம மந்திரி கிசானின் ஆறாவது தவணைக்காக சுமார் 10 கோடி விவசாயிகள் காத்திருக்கிறார்கள் எனவும் அடுத்த தவணை சில நாட்களுக்குள் வரும் இதற்கு மத்திய அரசு தயாராகி வருகிறது என கூறிய நிலையில், இன்று பிரதமர் அலுவலகம் அறிவிப்பு ஒன்றை தெரிவித்துள்ளது.
அதில், 6 வது தவணை ரூ .17,000 கோடி நிதியை 8.5 கோடி விவசாயிகளுக்கு விடுவிக்கப்படுகிறது என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும், வேளாண் உள்கட்டமைப்பு நிதியின் கீழ் ரூ .1 லட்சம் கோடி நிதி வசதியை பிரதமர் நரேந்திர மோடி நாளை காலை 11 மணிக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைக்கிறார் எனவும் தெரிவித்துள்ளது.
டிசம்பர் 1, 2018 அன்று தொடங்கப்பட்ட பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டம் மூலம் 9.9 கோடிக்கும் அதிகமான விவசாயிகளுக்கு ரூ .75,000 கோடிக்கு மேல் வழங்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.
டெல்லி : இன்று ஏப்ரல் 2, 2025, மற்றும் நாளை (ஏப்ரல் 3, 2025) மக்களவையில் வக்பு வாரிய திருத்த…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…
லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…
சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…
லக்னோ : தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…