இந்தியாவுக்கு ரூ.16,698 கோடி நிதி ஒதுக்கப்படும் – ஆசிய வளர்ச்சி வங்கி அறிவிப்பு.!
கொரோனா தடுப்பு பணிக்காக இந்தியா 2.2 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கப்படும் என ஆசிய வளர்ச்சி வங்கி அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோன வைரஸ் தீவிரமடைந்து வருவதால், மத்திய மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இதில் ஒரு பகுதியாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6412 ஆகவும், உயிரிழப்பின் எண்ணிக்கை 199 ஆகவும் உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் ஏற்படும் நெருக்கடியை சமாளிக்க மத்திய, மாநில அரசு கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு தங்களால் முடிந்த நிதியை வழங்கலாம் என்று கேட்டுக்கொண்டது. இதனால் பலரும் தங்களால் முடிந்த நிதியை வழங்கி வருகிறார்கள்.
இந்நிலையில், கொரோனா தடுப்பு பணிக்காக இந்தியாவுக்கு ரூ.16,698 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று ஆசிய வளர்ச்சி வங்கி அறிவித்துள்ளது. இந்தியாவில் பரவிய கொரோனா தொற்றை பரவாமல் தடுக்க ஆசிய வளர்ச்சி வங்கி ரூ.16,698 கோடி நிதி ஒதுக்கியுள்ளது என அதிகாரபூர்வமான ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில், இந்தியா சுகாதாரத் துறைக்கு 2.2 பில்லியன் டாலர் ஒதுக்கியுள்ளதாகவும், தொற்றுநோய்களால் ஏற்பட்டிருக்கும் பொருளாதார தாக்கத்தை ஏழைகளுக்குத் குறைக்க உதவுவதாக தெரிவித்துள்ளது. மேலும் அமைப்புசாரா தொழிலாளர்கள், மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு உதவியாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளது.
#ADBNEWS: ADB is now preparing $2.2 billion in immediate assistance to India’s health sector and also to help alleviate the economic impact of the pandemic on the poor; informal workers; micro, small, and medium enterprises; and the financial sector.
READ: https://t.co/bVLvbbtQ0Y pic.twitter.com/XUEaCnjM7u— Asian Development Bank (@ADB_HQ) April 10, 2020