பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை நேற்று முன்தினம் விரிவாக்கம் செய்யப்பட்டு பல துறைகளில் புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர்.
இதனையடுத்து,பிரதமர் மோடி தலைமையில், புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம் நேற்று நடைபெற்றது.இந்த கூட்டத்தில், புதிதாக பதவியேற்ற 43 அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.அக்கூட்டத்தில் சுகாதார மற்றும் வேளாண் துறைகளுக்கான மேம்பாடுகள் போன்றவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி,நாடு முழுவதும் 736 மாவட்டங்களில் உள்ள ஆரம்ப மற்றும் மாவட்ட சுகாதார மையங்களில் மருத்துவ உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக மாநிலங்களுக்கு ரூ.15,000 கோடி ஒதுக்கீடு செய்யவும், இத்திட்டங்களை ஒன்பது மாதங்களுக்குள் செயல்படுத்தவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
முன்னதாக,கொரோனாவால் பாதிக்கப்பட்ட துறைகளை மேம்படுத்தவும், மருத்துவ கட்டமைப்புகளை உருவாக்கவும் பல்வேறு துறைகளுக்கு 1.1 லட்சம் கோடி கடன் உறுதி திட்டத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விழுப்புரம் : சாதிய பாகுபாடு , அதனால் ஏற்பட்ட இருதரப்பு மோதல் காரணமாக 22 மாதங்களாக மூடி இருந்த திரௌபதி…
சென்னை : தமிழ்நாட்டில் பிரதான கட்சிகள் (அதிமுக, திமுக) கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து இருந்தாலும் , தேர்தல் முடிந்த…
டெல்லி : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.…
நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…