ஐந்து குழந்தைகள் பெற்ற கத்தோலிக்க தம்பதிகளுக்கு மாதம் ரூ.1,500 உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் சீரோ மலபார் கத்தோலிக்க ஆலயத்தின் பாலா மறைமாவட்டம் சார்பில் குடும்ப ஆண்டு கடைபிடிக்கப்படுகிறது. மத்திய கேரளாவை சேர்ந்த பாலா மறைமாவட்ட ஆயர் ஜோசப் கல்லரங்காட் மற்ற ஆலயங்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, அனைத்து ஆலயங்களிலும் குடும்ப ஆண்டு கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இதன் பின்னர் அனைத்து ஆலயங்களுக்கு உட்பட்டு வசிக்கும் கத்தோலிக்க குடும்பங்களில் 5 அல்லது அதற்கு மேல் குழந்தைகள் உடைய பெற்றோருக்கு மாதம் ரூ.1,500 உதவித்தொகை வழங்கப்படும் என்று கூறியுள்ளனர்.
மேலும், அந்த குழந்தைகளுக்கு சலுகைகளாக தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மறை மாவட்டத்தின் கீழ் உள்ள கல்வி நிறுவனங்களில் இலவச கல்வியும், மருத்துவமனைகளில் இலவச சிகிச்சையும் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று கூறியுள்ளனர்.
இது பற்றி பாலா மறைமாவட்ட குடும்ப நல இயக்கத்தின் பாதிரியார் ஜோசப் குற்றிங்கல் கூறியிருப்பதாவது, கேரளாவில் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக இந்த உதவிகள் வழங்கப்படுவதாக கூறியுள்ளார். மாநிலத்தில் 18.38% ஆக இருந்த கத்தோலிக்கர்கள் எண்ணிக்கை தற்போது 14% ஆக குறைந்துள்ளது.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…