5 குழந்தைகள் பெற்ற கத்தோலிக்க தம்பதிகளுக்கு மாதம் ரூ.1,500 உதவித்தொகை..!

Default Image

ஐந்து குழந்தைகள் பெற்ற கத்தோலிக்க தம்பதிகளுக்கு மாதம் ரூ.1,500 உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் சீரோ மலபார் கத்தோலிக்க ஆலயத்தின் பாலா மறைமாவட்டம் சார்பில் குடும்ப ஆண்டு கடைபிடிக்கப்படுகிறது. மத்திய கேரளாவை சேர்ந்த பாலா மறைமாவட்ட ஆயர் ஜோசப் கல்லரங்காட் மற்ற ஆலயங்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, அனைத்து ஆலயங்களிலும் குடும்ப ஆண்டு கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இதன் பின்னர் அனைத்து ஆலயங்களுக்கு உட்பட்டு வசிக்கும் கத்தோலிக்க குடும்பங்களில் 5 அல்லது அதற்கு மேல் குழந்தைகள் உடைய பெற்றோருக்கு மாதம் ரூ.1,500 உதவித்தொகை வழங்கப்படும் என்று கூறியுள்ளனர்.

மேலும், அந்த குழந்தைகளுக்கு சலுகைகளாக தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மறை மாவட்டத்தின் கீழ் உள்ள கல்வி நிறுவனங்களில் இலவச கல்வியும், மருத்துவமனைகளில் இலவச சிகிச்சையும் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று கூறியுள்ளனர்.

இது பற்றி  பாலா மறைமாவட்ட குடும்ப நல இயக்கத்தின் பாதிரியார் ஜோசப் குற்றிங்கல் கூறியிருப்பதாவது, கேரளாவில் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக இந்த உதவிகள் வழங்கப்படுவதாக கூறியுள்ளார். மாநிலத்தில் 18.38% ஆக இருந்த கத்தோலிக்கர்கள் எண்ணிக்கை தற்போது 14% ஆக குறைந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
good bad ugly ajithkumar
mk stalin vs eps
Anbumani Ramadoss - Dr Ramadoss
RCB - IPL 2025
mk stalin
dominicanRepublic