ஆறு கோடி விவசாயிகளுக்கு ரூ.12 கோடி பணம்.! உருளைக்கிழங்கு மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு.!

Default Image
  • குஜராத் மாநிலம், காந்திநகா் மாவட்டத்தில் 3-வது சா்வதேச உருளைக்கிழங்கு மாநாடு நடைபெற்றது. இது 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த மாநாடு இந்தியாவில் நடத்தப்பட்டு வருகிறது.
  • இந்த மாநாட்டில் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமாக இணைந்து உரையாற்றிய பிரதமர் மோடி, சில குறிப்பிட்ட உணவு தானியங்கள், உணவுப் பொருட்களை அதிகம் உற்பத்தி செய்யும் முதல் 3 நாடுகளில் நம் இந்திய நாடும் உள்ளது. இந்த சாதனை நமது விவசாயிகளின் அயராத உழைப்பாலும், அரசின் சிறப்பான திட்டங்களாலுமே சாதித்தியமாகியுள்ளது என தெரிவித்தார்.

குஜராத் மாநிலம், காந்திநகா் மாவட்டத்தில் 3-வது சா்வதேச உருளைக்கிழங்கு மாநாடு நடைபெற்றது. நாட்டில் உருளைக்கிழங்கு விளைச்சல் குறித்த ஆய்வு, அந்தத் துறையில் உள்ள சவால்கள், அவற்றுக்கான தீா்வுகள் ஆகியவை குறித்து பேசுவதற்காக 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சா்வதேச உருளைக்கிழங்கு மாநாடு இந்தியாவில் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு முன்னா் கடந்த 1998 மற்றும் 2008-ம் ஆண்டுகளில் இந்த மாநாடு நடைபெற்றது. இதில் இந்திய உருளைக்கிழங்கு சங்கம், டெல்லியில் உள்ள விவசாய ஆராய்ச்சிக்கான இந்திய கவுன்சில் மற்றும் மத்திய உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து இந்த மாநாட்டை நடத்துகின்றன.

இந்நிலையில், குஜராத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில் இன்று வீடியோ கான்பரன்ஸ் மூலமாக இணைந்து உரையாற்றிய பிரதமர் மோடி, சில குறிப்பிட்ட உணவு தானியங்கள், உணவுப் பொருட்களை அதிகம் உற்பத்தி செய்யும் முதல் மூன்று நாடுகளுள் நம் இந்திய நாடும் இருக்கின்றது. இந்த சாதனை நமது விவசாயிகளின் அயராத உழைப்பாலும், அரசின் சிறப்பான திட்டங்களாலுமே சாதித்தியமாகியுள்ளது. மேலும் வரும் 2022-ம் ஆண்டுக்குள் நம் நாட்டு விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காக்க பல்வேறு முயற்சிகள் செய்து வருகின்றோம். பின்னர் விவசாயிகளுடன் அரசும் இணைத்திருப்பதாலே பல சாதனைகளை  நிகழ்த்த முடிகிறது. சுமார் 6 கோடி விவசாயிகளுக்கு இதுவரையில் ரூ.12 ஆயிரம் கோடி பணம் அவரவர் வங்கிக்கணக்கில் நேரடியாக போடப்பட்டுள்ளது என பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்