துபாய்: பேருந்து விபத்தில் காயமடைந்த இந்தியருக்கு ரூ.11 கோடி இழப்பீடு.!
கடந்த 2019 ஆம் ஆண்டு துபாயில் 12 இந்தியர்கள் உட்பட 17 பேரைக் கொன்ற பேருந்து விபத்தில் சிக்கி, படுகாயமடைந்த இந்தியர் ஒருவருக்கு ரூ.11 கோடிக்கு மேல் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடக அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
படுகாயமடைந்த அந்த நபர் முஹம்மது பெய்க் மிர்சா என்ற 20 வயதான பொறியியல் மாணவர் என்றும், அவர் ஓமானில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானதில் 31 பயணிகளில் 17 பேர் உயிரிழந்தனர், அவர்களில் 12 பேர் இந்தியர்கள் என்று கலீஜ் டைம்ஸ் என்ற செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் சிக்கி படுகாயமடைந்த முஹம்மது என்ற இந்தியனுக்கு மூளையில் பலத்த பாதிப்பு ஏற்பட்டது, அதனால் அவர் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரது, மூளையில் 50 சதவீதம் நிரந்தர பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துமனை கொடுத்த அறிக்கையின் அடிப்படையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உச்ச நீதிமன்றம், ரூ.11 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், அந்த பேருந்தை ஒட்டிய ஓமன் நாட்டைச் சேர்ந்த ஓட்டுநருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடுகள் வழங்கப்பட்டது.