கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் தபால்துறை ஊழியர்களுக்கு ரூ.10,00,000 நிவாரணம் .!
இந்தியாவில் கொரோனா தாக்கம் காரணமாக முதலில் ஏப்ரல் 14 -ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.பின்னர் கொரோனா தாக்கம் தவிரமடைந்ததால் ஊரடங்கு மே3-ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். ஊரடங்கு காரணமாக விமானம் , ரயில் பேருந்து சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சரக்கு ரயில் மற்றும் அவசர விமான சேவைக்கு இயங்கி வருகின்றனர்.
மத்திய அரசின் பல்வேறு திட்டப்பயனாளர்களுக்கு சேர வேண்டிய தொகையை வழங்க நாடு முழுவதும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தபால் ஊழியர்கள், தபால்காரர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும் அரசால் வழங்கப்படும் ஓய்வூதியம் உள்ளிட்டவை பயனாளர்களின் வீடுகளுக்கு சென்று வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா தொற்றினால் தபால் சேவையின்போது உயிரிழக்கும் தபால் துறை ஊழியர்களுக்கு பத்து லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.