முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.10,000 அபராதம், 2 ஆண்டுகள் சிறை.. கேரள அரசு அதிரடி!

Default Image

கேரளாவில் பொதுஇடங்களில் முகக்கவசம் அணியாமல் இருந்தால் ரூ.10,000 அபராதமும், 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்படும் என அம்மாநில அரசு எச்சரித்துள்ளது.

கேரளாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக அங்கு சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அங்கு இன்று ஒரே நாளில் 193 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 5,522 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், கொரோனா வைரஸ் பரவலை குறைக்கும் நடவடிக்கையாக, கேரளாவில் ஜூலை 2021 வரை பொதுமுடக்க விதிமுறைகள் நீடிக்கப்படுவதாக அம்மாநில அரசு நேற்று தெரிவித்துள்ளது. அதன்படி, முகக்கவசம் அணிவது, சமூகஇடைவெளியை பின்பற்றுவது, எச்சில் துப்புவது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

இந்நிலையில் கேரளாவில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருந்தால், அங்கு ரூ.10,000 அபராதமும், 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும் அங்கு திருமண நிகழ்ச்சியில் 50 பேருக்கு மேல் பங்கேற்கக்கூடாது என சில காட்டுப்பாடுகளை அடுத்தாண்டு ஜூலை மாதம் வரை நீடித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Polling - snow
TN CM MK Stalin speak in Tamilnadu Climate Change Summit 3.O
Shivam Dube Creates History
R Ashwin praise Himanshu sangwan
BJP MLA Vanathi Srinivasan
tamilnadu gold store purchsae
Chennai Snow Fall