ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதம் ரூ.1,000 வழங்கப்படும்- முதல்வர் கெஜ்ரிவால்..!
பஞ்சாபில் 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதம் 1000 ரூபாய் வழங்குவோம் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் வாக்குறுதியை அளித்தார்.
பஞ்சாப் மாநிலம் மோகாவில் நடைபெற்ற பேரணியில் பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் வாக்குறுதியை அளித்தார். அதில், 2022-ல் பஞ்சாபில் ஆட்சி அமைத்தால் ஆம் ஆத்மி ஆட்சி அமைந்தால் ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்றார். ஓய்வூதியம் தவிர இந்தப் பணம் கிடைக்கும். ஒரு குடும்பத்தில் மூன்று பெண்கள் இருந்தால், மூவருக்கும் தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்தார்.
பணம் எங்கிருந்து வரும் என்று என் எதிரிகள் சொல்வார்கள் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். பஞ்சாபிலிருந்து மாஃபியாவை ஒழிக்க வேண்டும். பணம் வரும், முதல்வர் விமானத்தை வாங்குகிறார். நான் வாங்கவில்லை. இந்த தேர்தல் பஞ்சாபின் எதிர்காலத்தை மாற்றும் என கூறினார்.
மேலும், பெண்கள் அதிகாரம் பற்றி ஒவ்வொரு கட்சியும் பேசுகிறது. ஆனால் யாரும் அதை செய்வதில்லை. டெல்லியை உதாரணம் காட்டிய கெஜ்ரிவால் இந்த தேர்தல் பஞ்சாபின் எதிர்காலத்தை மாற்றும், டெல்லியின் நிலை பள்ளிகள் நன்றாகிவிட்டன, மின்சாரம் நன்றாகிவிட்டது. இன்னும் பல விஷயங்கள் செய்யப்பட்டுள்ளன என்பது உங்களுக்குத் தெரியும்.
இந்த முறை யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று தந்தையோ, கணவரோ கூறமாட்டார்கள் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். மாறாக யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை பெண்கள் முடிவு செய்வார்கள். இந்த முறை கெஜ்ரிவாலுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து பாருங்கள் என்று எல்லா பெண்களும் வீட்டில் சொல்ல வேண்டும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.