ஃபானி புயலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு ரூ.1,000 கோடி நிதி!
அதி தீவிர புயலான ஃபானி புயல், ஒடிசாவில் பூரி பகுதியில் இன்று காலை 8 மணி முதல் 11 மணிக்குள்ளாக கரையை கடந்தது. இதனால் அப்பகுதியில் பலத்த காற்று வீசியது. கடல் சீற்றத்துடன் காணப்பட்ட நிலையில், அப்பகுதியில் வசித்த மக்களும் வெளியேற்றப்பட்டனர்.
இந்த புயல் பாதிப்பால், பல்லாயிர கணக்கான மரங்கள் மற்றும் வீடுகள் சேதமடைந்துள்ளது. இந்நிலையில், ஃபானி புயலால் பாதிக்கப்பட்டு மாநிலங்களுக்கு மத்தியஅரசு ரூ.1,000 கோடி நிதி அளிப்பதாக அறிவித்துள்ளது.