ஆம் ஆத்மிக்கு ரூ.100 கோடி லஞ்சம்.. மதுபான ஊழலில் சிக்கிய தெலுங்கனா முதல்வர் மகள்!

Default Image

டெல்லி மதுபான கொள்கை ஊழலில் தெலுங்கனா முதல்வர் சந்திரசேகர் ராவின் மகளான கே.கவிதாவும் ஒருவர் என அமலாக்கத்துறை தகவல்.

டெல்லியில் ஆம் ஆத்மி அரசின் மதுபான கொள்கை முடிவில் பெரும் ஊழல் நடந்துள்ளது என்று கூறி விசாரணை அமைப்புகளான சிபிஐ, அமலாக்கத்துறை குற்றசாட்டை முன்வைத்திருந்தது. அதாவது, டெல்லியில் ஆம் ஆத்மி அரசானது தனியார் மதுபான கடைகளுக்கு அனுமதி மற்றும் சலுகைகளை வழங்கியது.

இதன்பின் மதுபான கொள்கை முடிவில் ஊழல் நடந்துள்ளது என கூறப்பட்டது. இதன் விளைவாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது பல்வேறு நடவடிக்கைகள் அடுத்தடுத்து பாய்ந்தன. இதுதொடர்பான விசாரணையை சிபிஐ, அமலாக்கத்துறை தொடர்ந்து நடத்தி வருகிறது.

இந்த நிலையில் தற்போது மதுபான கொள்கை ஊழல் விவகாரம் தெலுங்கானா வரை சென்றுள்ளது. அதாவது, டெல்லி மதுபான ஊழலை விசாரித்து வரும் அமலாக்கத்துறை, ஆம் ஆத்மி கட்சியைத் தவிர, இந்த ஊழலில் பெரும் பயனடைந்தவர்களில் பாரத ராஷ்டிர சமிதி எம்எல்சியும், தெலுங்கனா முதல்வர் சந்திரசேகர் ராவின் மகளுமான கே.கவிதாவும் ஒருவர் என்று குற்றம் சாட்டியுள்ளது.

மேலும், மற்ற இரண்டு பயனாளிகள் ‘அரவிந்தோ’ ஷரத் சந்திர ரெட்டி மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்பி மகுண்டா ஸ்ரீநிவாசுலா ரெட்டி அடங்குவர். அமலாக்கத்துறை, அதன் விசாரணை மற்றும் ஊழலில் ஈடுபட்ட பல்வேறு நபர்களின் வாக்குமூலங்களை குறிப்பிட்டு, அதன் குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று நபர்களை உள்ளடக்கிய தெற்கு குழு, தேசிய தலைநகரில் மதுபான வியாபாரம் செய்ய டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சிக்கு 100 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக கூறியுள்ளது.

ED அறிக்கையின்படி, கவிதா, மகுண்டா குடும்பத்துடன் 65 சதவீதத்தை இண்டோஸ்பிரிட்டில் தனது ப்ராக்ஸி அருண்பிள்ளை மூலம் வைத்துள்ளார். இது 14 கோடி பாட்டில்களை சில்லறை விற்பனையில் விற்று குறைந்தபட்சம் ரூ.195 கோடி லாபம் ஈட்டியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சவுத் குரூப் மற்றும் AAP இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி, விற்பனையில் கிடைக்கும் 12% லாபம் அவர்களுக்கு இடையே சமமாக பகிர்ந்து கொள்ளப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்