மும்பை முலுண்டில் உள்ள அலுவலகத்தில் துப்பாக்கி முனையில் 1 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது.
மும்பை முலுண்ட் பகுதியில் உள்ள ஒரு அலுவலகத்தில் துப்பாக்கி முனையில் சுமார் ரூ.1 கோடியை கொள்ளையடித்த அடையாளம் தெரியாத மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முலுண்ட் காவல்துறை மற்றும் குற்றப்பிரிவு அதிகாரிகள் குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில், குற்றவாளிகள் இருவர் உரிமையாளரையும், ஊழியர்களையும் கைத்துப்பாக்கிகளைக் காட்டி மிரட்டி அலுவலகத்தில் இருந்த பணத்தை பறிக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. குற்றம் சாட்டப்பட்டவர்கள் பயன்படுத்திய வாகனமும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
மேலும் போலீசார் அந்த காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை கண்டுபிடிக்க முயற்சித்து வருவதாக குற்றப்பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். முலுண்ட் காவல் நிலையத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் அந்த அலுவலகம் அமைந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். நேற்று பிற்பகல் 3 மணியளவில் அலுவலக உரிமையாளரும், அவரது இரண்டு ஊழியர்களும் அங்கு இருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சென்னை : பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ள அண்ணாமலை இன்னும் ஒருசில தினங்களில் மாற்றப்படுகிறார். அவருக்கு பதிலாக புதிய…
சென்னை : வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் எரிவாயு (கியாஸ்) சிலிண்டரின் விலையை மத்திய அரசு ரூ.50 உயர்த்தியுள்ளது. அதாவது, இதுவரை…
மும்பை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே…
டெல்லி : மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியுள்ளது என்ற செய்தி தலைப்பு செய்தியாக…
பிஹார் : மாநிலத்தின் பெகுசராய் நகரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் "பலாயன் ரோகோ, நவுக்ரி தோ" (இடம்பெயர்வை நிறுத்து, வேலைவாய்ப்பு கொடு)…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ' யார் அந்த தியாகி?'…