சுட்டுக் கொல்லப்பட்ட காவலர் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி நிதி- யோகி ஆதித்யநாத் அறிவிப்பு.!
உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் அருகே உள்ள பிக்ரு என்ற கிராமத்தில் விகாஸ் துபே என்ற ரவுடி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ரவுடி விகாஸ் துபே தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதனால், டி.எஸ்.பி தேவேந்திர மிஸ்ரா தலைமையில் போலீசார், இன்று விகாஸ் துபே இருந்த இடத்திற்கு சென்றுள்ளனர். அப்போது, போலீசாருக்கும், ரவுடிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில், டி.எஸ்.பி தேவேந்திர மிஸ்ரா உள்பட 8 போலீசார் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், ரவுடிகளுடன் நடைபெற்ற மோதலில் சுட்டுக் கொல்லப்பட்ட காவலர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி நிதி வழங்கப்படும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.