மாநிலங்களுக்கு ரூ.1.3 லட்சம் கோடி வட்டியில்லா கடன்!
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்ற மக்களவையில் இன்று தாக்கல் செய்தார். அதில், பல்வேறு அறிவிப்புகள், புதிய திட்டங்கள் உள்ளிட்டவை வெளியிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மாநிலங்களுக்கு வட்டியில்லா கடனாக ரூ.1.3 லட்சம் கோடி வழங்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
அதாவது, மாநிலங்களுக்கு வழங்கப்படும் 50 ஆண்டுகளுக்கான வட்டி இல்லா கடன் உதவி வழங்கும் திட்டத்தின் மூலம் நடப்பாண்டில் 1.3 லட்சம் கோடி வழங்கப்படும் என்றார். மேலும், நிதியமைச்சரின் பட்ஜெட் உரையில், தொழில் தொடங்க வட்டியில்லாக் கடன் வழங்குவதற்காக ரூ.1 லட்சம் கோடியில் புதிய நிதியம் அமைக்கப்படும். விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
10 ஆண்டுகளில் 25 கோடி பேர் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர்.! நிர்மலா சீதாராமன்.!
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் அனைத்து அங்கன்வாடி ஊழியர்களும் சேர்க்கப்படுவார்கள். வரும் நிதியாண்டில் நிதி பற்றாக்குறை 5.8% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் ரூ.11.75 லட்சம் கோடி கடன் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மாவட்டங்கள் மற்றும் தொகுதிகளின் விரைவான வளர்ச்சியில் மாநிலங்களுக்கு உதவ எங்கள் அரசாங்கம் தயாராக உள்ளது. வட கிழக்கு மாநிலங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்படும் எனவும் நிதியமைச்சர் கூறியுள்ளார்.