ரோஜ்கர் மேளா : 1 லட்சம் இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கினார் பிரதமர் மோடி.!

PM Modi - Rozgar Mela 2024

ஆண்டுதோறும் ரோஜ்கர் மேளா எனும் திட்டத்தின் கீழ் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு உரிய நபர்களை தேர்ந்தெடுத்த்து பிரதமர் மோடி அவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி வருகிறார்.  அதேபோல, தற்போது இந்த ரோஜ்கர் மேளா (Rozgar Mela) திட்டத்தின் கீழ் 1 லட்சம் பேருக்கு பணி நியமனம் ஆணைகளை பிரதமர் மோடி வழங்குகிறார்.

20,000 விவசாயிகள் டெல்லியில் திரள திட்டம்… இன்று பேச்சுவார்த்தை நடத்தும் மத்திய அரசு!

இந்தியா முழுக்க 47 இடங்களில் இந்த ரோஜ்கர் மேளா (Rozgar Mela) திட்டத்தின் கீழ் சுமார் 1 லட்சத்திற்கும் மேலான இளைஞர்களுக்கு மத்திய அரசின்,  உயர்கல்வித்துறை, அணுசக்தி துறை, வருவாய்த்துறை. உள்த்துறை , பாதுகாப்புத்துறை, நிதி சேவைகள் துறை, குடும்பநல துறை, பழங்குடியினர் நலத்துறை, ரயில்வே துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணிகள் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த பணி நியாமன ஆணைகளை டெல்லியில் இருந்து பிரதமர் மோடி இன்று காணொளி வாயிலாக அளித்துள்ளார். இந்த நிகழ்வில், டெல்லியில் புதிய கட்டப்பட உள்ள ஒருங்கிணைந்த கர்மயோகி பவன் கட்டடத்திற்கு காணொளி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.

டெல்லியில் உள்ள ஒருங்கிணைந்த வளாகமான ‘கர்மயோகி பவன்’கட்டடத்தில் பல்வேறு துறைகளை சேர்ந்த வளாகங்கள் இடம்பெற உள்ளது. இதில் ஆன்லைன் மூலம் பல்வேறு துறை சார்ந்து கல்வி கற்றல் உள்ளிட்ட பல்வேறு விதமான சேவைகள் வழங்கப்பட உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்