கான்பூரில் ரவுடி விகாஷ் துபேயின் சகோதரர் வீட்டிலிருந்து அரசாங்க அம்பாசிடர் கார் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசத்தில் உள்ள கான்பூரில் பிரபல ரவுடியாக வலம் வருபவர் விகாஷ் துபே. இவர் மீது ஏகப்பட்ட கொலை உட்பட கொலை முயற்சி, கொலை வழக்குகள் என 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரை போலீசார் பிடிக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் கூட கான்பூரில் உள்ள பிகாரு என்ற கிராமத்தில் பதுங்கி இருப்பதாக தெரிய வந்ததை அடுத்து, அவரை கைது செய்ய 15 பேர் கொண்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
இதனை அறிந்த விகாஷ் துபே மற்றும் அவரது ஆட்கள் , போலீசாரை சுற்றி வளைத்து சுட்டதால் 8 போலீசார் உயிரிழந்தனர். இந்த நிலையில் தற்போது லக்னோ காவல்துறை, விகாஷ் துபேயின் சகோதரரின் வீட்டிலிருந்து அரசாங்க வாகனம் ஒன்றை மீட்டுள்ளனர். இது குறித்து போலீசார் கூறியதாவது, கடந்த 2004-ம் ஆண்டு அம்பாசடர் கார் ஒன்றை மாநில அரசால் வாங்கப்பட்டு, ஆளுநரின் முதன்மை செயலாளரின் பெயரில் பதிவு செய்யப்பட்டது. 10 ஆண்டுகளாக பயன்படுத்திப்பட்ட இந்த காரை 2014-ல் ஏலம் விட்ட போது விகாஷ் துபேயின் சகோதரரான தீப் பிரகாஷ் வாங்கியதாக கூறப்படுகிறது.
ஆனால், அவர் அந்த காரை தனது பெயரில் மாற்றம் செய்யவில்லை, வரிகளையும் செலுத்தவில்லை . மேலும் இந்த அம்பாசிடர் காரை அரசியல்வாதிகளையும், அரசு அதிகாரிகளையும் சந்திக்க அவருக்கு வழங்கியதாக கூறியதாக போலீஸார் தெரிவித்தார். இந்த காரை தவிர அதே தயாரிப்பில் உள்ள புல்லட்ப்ரோஃப் கார் ஒன்றையும் பறிமுதல் செய்தனர். மேலும் விகாஷ் துபே நேபாளம் அல்லது அண்டை மாநிலத்திற்கு தப்பி சென்றிருக்கலாம் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவரை கைது செய்வதற்கான தகவல் தருபவர்களுக்கு ரூ. 50,000 பரிசு தொகையை உத்தரப்பிரதேச போலீசாரால் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை: சென்னையில் நான்காவது முறையாக வேளாண் உழவர் நலத் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள, செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சியை இன்று…
கர்நாடகா : தினம் தினம் வித்தியாசமாக சிலர் வழக்கு தொடர்ந்து நீதி மன்றத்தில் நிவாரணம் கோரி அவர்களுக்கு நிவாரணம் கொடுக்கப்பட்டு வரும்…
சென்னை: அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசுத் துறையில் பணியாற்றும் சி மற்றும்…
இயற்கையாக கிடைக்கும் கிருமி நாசினியான வேப்பிலையின் மருத்துவ குணங்களை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :வேப்ப மரத்தில் பல…
சிட்னி : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டிராபியின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து கேப்டன் ரோஹித் சர்மா விலகியுள்ளதாக…
டெல்லி: தமிழகத்தை சேர்ந்த பாராலிம்பிக்ஸ் பேட்மிண்டனில் வெள்ளிப்பதக்கம் வென்ற துளசிமணி முருகேசனுக்கும், வெண்கல பதக்கம் வென்ற மணிஷா ராமதாஸுக்கும் 2024ஆம்…