சமீபத்தில் 8 போலீஸ்காரர்களைக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல ரவுடி விகாஸ் துபே போலீசாரை தாக்கி விட்டு தப்பிக்க முயன்றபோது போலீசார் என்கவுண்டர் செய்தனர்.
இந்நிலையில், இது குறித்து இன்று செய்தியாளர்களிடன் பேசிய உ.பி ஏ.டி.ஜி பிரசாந்த் குமார், கடந்த ஜூலை 3-ஆம் தேதி பிக்ரு கிராமத்தில் 8 போலீஸ்காரர்களைக் கொலை செய்த பின்னர் குற்றம் சாட்டப்பட்டவர்கள் எங்கள் போலீஸ்காரர்களின் ஆயுதங்களையும் கொள்ளையடித்தனர் எனவும், இந்த வழக்கில் மொத்தம் 21 குற்றவாளிகள் உள்ளனர்.
அவர்களில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், விகாஸ் துபே உட்பட 6 குற்றவாளிகள் பல்வேறு சம்பவங்களில் போது சுட்டு கொல்லப்பட்டனர் என தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, கான்பூரில் 8 போலீசாரை ரவுடிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதுடன், ஆயுதங்களாலும் தாக்கி கொடூரமாக கொன்றது பிரேத பரிசோதனையில் அம்பலமானது.
மேலும், பிக்ரு கிராமத்தில் உள்ள விகாஸ் துபே இல்லத்தில் கொள்ளையடிக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் இருந்தனர். விகாஸ் துபேயின் இல்லத்தில் தேடியபோது, கொள்ளையடிக்கப்பட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டது என அவர் தெரிவித்தார்.
டெல்லி : மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்குமான தேர்தல் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் 38 தொகுதிகளுக்கான 2ஆம்…
சென்னை -ஐயப்பனுக்கு மட்டும் ஏன் இருமுடி கட்டு காரணம் என்ன என்பதை பற்றியும் அதன் வரலாறு பற்றியும் இந்த பதிவில்…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…
கன்னியாகுமரி : கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டுடி சம்பர் 3ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து…
சென்னை : இயக்குனர் பாலா 'வணங்கான் ' என்ற படத்தை இயக்கி வருகிறார். 'வணங்கான்' படத்திலிருந்து சூர்யா விலகிய பிறகு,…
தூத்துக்குடி : முருகனின் அறுபடை வீடுகளில் 2வது புண்ணிய தலமாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இங்கு நாள்தோறும்…