சென்னை: புதுச்சேரியில் லேசான மழை, கடல் சீற்றம் காரணமாக கடலில் இறங்க சுற்றுலா பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் மற்றும் தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 கிலோமீட்டர் முதல் 50 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
புதுச்சேரியில் ஏப்ரல் மாதத்தில் இருந்து வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக அவ்வபோது மழை பெய்து வருகிறது. இதனிடையே, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 5 நாட்கள் அநேக இடங்களில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், லேசான கடல் சீற்றம் காரணமாக புதுச்சேரி கடற்கரையில் இறங்க சுற்றுலாப் பயணிகளுக்கு போலீசார் தடை விதித்தனர். இந்நிலையில், இன்று காலை கடற்கரையில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை போலீசார் வெளியேற்றினர்.
சென்னை : இன்று (நவம்பர் 27) சென்னை கலைவாணர் அரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சீருடை பணியாளர் தேர்வில் வெற்றி பெற்று…
சென்னை : வங்கக்கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவான புயலாக மாறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.…
சென்னை : தமிழக துணை முதல்வரும் திமுக இளைஞரணித் தலைவருமான உதயநிதி ஸ்டாலினின் 47ஆவது பிறந்தநாள் இன்று. உதயநிதி பிறந்தநாளை…
சென்னை: கடந்த வாரம் முழுக்க ஏறுமுகமாக இருந்த தங்கத்தின் விலை, இந்த வாரம் தொடர்ந்து இரண்டு நாளாக இறக்கம் கண்டது.…
சென்னை : வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து இன்று பிற்பகல் புயலாக மாறும் என வானிலை…
சென்னை : நீலகிரியில் இன்று முதல் நவம்பர் 30-ம் தேதி வரை தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருக்கிறார் குடியரசு…