தந்தைக்குப் பிறகு ஹெச்.சி.எல் நிறுவனத்தை தலைமை தாங்கும் ரோஷினி நாடார்!
தந்தைக்குப் பிறகு ஹெச்.சி.எல் நிறுவனத்தை தலைமை தாங்கும் ரோஷினி நாடார்.
ஆசியாவின் தலைசிறந்த ஐ.டி நிறுவனங்களில் ஒன்றான ஹெச்.சி.எல். நிறுவனத்திற்கு, தந்தைக்குப் பிறகு தலைமை தாங்கும் பொறுப்பை, ஷிவ் நாடாரின் மகள் ரோஷினி நாடார் ஏற்றுள்ளார். இவர், அமெரிக்காவில் எம்.பி.ஏ. முடித்தவர். உலக பொருளாதார மன்றத்தின் முன்னாள் மாணவர். வனவிலங்குகள் பாதுகாப்பில் ஆர்வம் கொண்ட ரோஷ்னி நாடார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ‘தி ஹபிடேட்ஸ்’ என்ற அறக்கட்டளையும் உருவாக்கியுள்ளார்.
ரோஷ்னி ஹெச்.சி.எல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதை ஹெச்.சி.எல் நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில், இதுகுறித்து அவரது தந்தை ஷிவ் நாடார் கூறுகையில், தன் மகளுக்காகத் தலைவர் பதவியை விட்டுக்கொடுத்த ஷிவ் நாடார் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு நிறுவனத்தில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளோம் என தெரிவித்துள்ளார்.
மேலும், 2017 முதல் 2019 வரை உலகின் சக்தி வாய்ந்த நூறு பெண்களின் பட்டியலில் தொடர்ந்து இடம் பெற்று வருகிற இவர், இந்தியாவின் நம்பர் ஒன் பணக்கார பெண் ரோஷ்னி நாடார் என்பதும் குறிப்பிடத்தக்கது.