ஆந்திர தொழில்துறை கட்டமைப்பு நிறுவன தலைவராக ரோஜா!

ஆந்திராவில் சமீபத்தில் நடந்த சட்ட பேரவை தேர்தலில் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது.இந்த வெற்றியை தொடர்ந்து ஆந்திரா மாநிலத்தில் அக்கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக பதவி ஏற்றார்.
இந்த தேர்தலில் நடிகை ரோஜா தனது தொகுதி மட்டுமல்லாமல் மற்ற தொகுதியிலும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டதால் தான் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது என பரவலாக பேசப்பட்டது.
ஆகையால் நடிகை ரோஜாவுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என பேச்சுகள் எழுந்தது.ஆனால் ரோஜாவிற்கு அமைச்சர் பதவி கொடுக்கவில்லை.இதனால் ரோஜாவின் ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியில் இருந்தாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நடிகை ரோஜாவிற்கு ஆந்திர மாநில தொழில் துறை கட்டமைப்பு நிறுவன தலைவராக முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நியமித்தார்.அந்த பொறுப்பை நேற்று நடிகை ரோஜா ஏற்றுகொண்டார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பத்ம பூஷன் விருதைப் பெற்றார் அஜித்குமார்!
April 28, 2025
மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார் மனோ தங்கராஜ்..!
April 28, 2025