4 மாதங்களாக தங்காத வீட்டிற்கு வாடகை கேட்ட ரூமேட்ஸ்.! ஆத்திரத்தில் கொலை செய்த இளைஞர்.!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
4 மாதங்களாக தங்காத வீட்டிற்கு வாடகை கேட்ட 2 ரூமேட்ஸை ஆத்திரத்தில் கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
உத்தரபிரதேசத்தை சேர்ந்த சாகீர் மேற்கு டெல்லியில் உள்ள ரகுபீர் நகரில் 4000 ரூபாய் வாடகைக்கு முகமது அஜாம் மற்றும் அமீர் ஹசன் என்பவர்களுடன் வீடு எடுத்து தங்கியிருந்தார். கடந்த நான்கு மாதங்களாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதன் காரணமாக சாகீர் தனது சொந்த ஊரான உத்தரப்பிரதேசத்திற்கு சென்று கடந்த 15 தினங்களுக்கு முன்பு தான் டெல்லியில் உள்ள ரூமிற்கு வந்துள்ளார்.
இந்த நிலையில் இவருடன் தங்கியிருந்த முகமது மற்றும் அமீர் இருவரும் சாகீருடன் வாடகை கேட்டுள்ளனர். 4 மாதமாக தங்காத ரூமுக்கு வாடகை தர முடியாது என்று கூறி சாகீர் மறுத்துள்ளார். அதனையடுத்து இருவரிடமும் சாகீர் வாக்குவாதத்தில் ஈடுபட, அவர்கள் சாகீரை தரக்குறைவாக பேசி அவமானப்படுத்தியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சாகீர் இருவரையும் கொலை செய்து விட்டு தப்பியோடியுள்ளார். தகவலறிந்த விரைந்து வந்த போலீசார் சாகீர் மீது வழக்கு பதிவு செய்து தலைமறைவாகி இருந்த சாகீரை கைது செய்தனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
விரைவில் பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்.! எதிர்பார்த்ததை விட வேகமெடுக்கும் நாசா!
February 12, 2025![Sunita Williams](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Sunita-Williams.webp)
விட்டதை பிடித்த இலங்கை… ஆஸி.,யை வீழ்த்தி ஒரு நாள் தொடரில் முதல் வெற்றி.!
February 12, 2025![Sri Lanka vs Australia 1st ODI](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Sri-Lanka-vs-Australia-1st-ODI.webp)