ராபர்ட் வதேரா வெளிநாடு செல்ல சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் சோனியா காந்தியின் மருமகனும் , பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வதேரா சட்ட விரோதமாக லண்டனில் சொத்து வாங்கி, சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்றதாக கூறி அமலாக்கத்துறையினர் ராபர்ட் வதேரா உள்ளிட்டோர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். ஏற்கனவே பலமுறை அமுலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வந்தது.
அந்நிய செலாவணி மோசடி வழக்கில் ராபர்ட் வதேராவுக்கு முன் ஜாமீன் வழங்கியது டெல்லி பாட்டியாலா நீதிமன்றம். மேலும் அனுமதியின்றி வெளிநாடு செல்லக்கூடாது என்றும் டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் ராபர்ட் வதேரா வெளிநாடு செல்ல சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது .செப்டம்பர் 21 -ஆம் தேதி முதல் அக்டோபர் 8-ஆம் தேதி வரை ஸ்பெயினுக்கு செல்ல வேண்டும் என்ற வாதோராவின் கோரிக்கை ஏற்றுள்ளது.
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…