ராபர்ட் வதேரா டெல்லியில் சைக்கிள் பயணம் மேற்கொண்டு பெட்ரோல் விலை உயர்வுக்கு தனது எதிர்ப்பினை பதிவு செய்தார்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக மக்கள் அனைவரும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.ஆகவே பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வேண்டுகோள் விடுத்தது வருகின்றனர்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா தலைநகர் டெல்லியில் சைக்கிள் பயணம் மேற்கொண்டு பெட்ரோல் விலை உயர்வுக்கு தனது எதிர்ப்பினை பதிவு செய்தார்.டெல்லியில் உள்ள கான் மார்க்கெட்டில் இருந்து தனது அலுவலகத்திற்கு வத்ரா சைக்கிளில் சென்றார் .அவருடன் பி.சி. சர்மா, ஜிது பட்வாரி மற்றும் குணால் சவுத்ரி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பயணம் மேற்கொண்டனர்.
எரிபொருள் விலை உயர்வின் தாக்கத்தில் மக்கள் இருக்கும் வேளையில் ஏ.சி கார்களில் அமர்ந்து பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொள்வதாக வதேரா தெரிவித்துள்ளார். “நீங்கள் (பிரதமர்) ஏசி கார்களில் இருந்து வெளியே வந்து மக்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும்.அவ்வாறு பார்த்தால் எரிபொருள் விலையை குறைப்பீர்கள்,” என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…